மாஸ்டர்ஸ் 'சூப்பர் 500° பாட்மின்டன் சாத்விக் - சிராக் தோல்வி.
மாஸ்டர்ஸ் 'சூப்பர் 500° பாட்மின்டன் சாத்விக் - சிராக் தோல்வி.
இந்தோனேஷியாவில், மாஸ்டர்ஸ் 'சூப்பர் 500° பாட்மின்டன் தொடர் நடக்கிறது.இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, காய்லாந்தின் கிட்டினுபோங் கெட்ரென், டெச்சபோல் ஜோடியை சந்தித்தது.சாத் விக், சிராக் ஜோடி 20-22, 21-23 என்ற நேர் செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தது.ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், ஜப்பானின் கென்டா நிஷிமோடோ மோதினர். இதில் லக்சயா சென் 16- 21, 21-12, 21-23 என போராடி வீழ்ந்தார்.
டென்னிஸ்ல் சஹாஜா காலிறுதிக்குள் நுழைந்தார்.
பெங்களூருவில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சஹாஜா, ரஷ்யாவின் டிமோபீபாவை எதிர்கொண்டார்.முதல் செட்டை 6-1 என வசப்படுத்திய சஹாஜா, அடுத்த செட்டை 3-6 என இழந்தார். மூன்றாவது செட்டினை 6-1 என கைப்பற்றினார். 2 மணி நேரம், 2 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் சஹாஜா, 6-1, 3-6, 6-1 என வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தார்.
0
Leave a Reply